அசிங்கமான பெண் - கவர்ச்சிகரமான வரதட்சணை., பாடநூல் விவகாரம் - மருத்துவர் இராமதாஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


வரதட்சணையை புனிதப் படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses  என்ற நூலில்  வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. 

TK Indrani என்பவர் எழுதிய இந்த நூல்  நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகின்றன; மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்; வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பன போன்ற அந்த நூலில் உள்ள கருத்துகள் பிற்போக்கானவை.

அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களை பண்டமாக பார்க்கும்  இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை.

வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை  செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Nursing student Book issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->