அதிமுக வேண்டாம்.. அண்ணாமலை தான் வேண்டும் - வைரலாகும் பாஜக போஸ்டர்.!
bjp poster vairal in paramakudi
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திரும்போனார். அதன் பின்னர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதையடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் என்று பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்... என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர்கள் பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.
English Summary
bjp poster vairal in paramakudi