பயங்கர தீ விபத்து - விருதுநகரில் 20 குடிசைகள் சேதம்.!!
20 house damage for fire accident in viruthunagar
விருதுநகர் மாவட்டம் பேட்டை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது குடிசை வீட்டில் இன்று அதிகாலை திடீர் என தீப்பற்றியது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

ஆனால் அதற்குள் அந்த வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமடைந்தது. இந்தத் தீ மளமளவென பரவியதால் அருகிலிருந்த 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளிலும் தீ பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
English Summary
20 house damage for fire accident in viruthunagar