தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறையும்: 2031க்குள் புதிய மாற்றம் - பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து! - Seithipunal
Seithipunal


சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் கட்டமைப்பில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் குறையும் நிலையில் உள்ளதாகவும், 2031க்குள் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத நிலை உருவாகும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. மக்களின் ஆதரவு குறைந்து கொண்டிருப்பதால், திராவிடக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தமிழ்நாடு மக்கள் தற்போது தயங்குகிறார்கள். அண்டை மாநிலங்களில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் 40 சதவீத வாக்குகளுடன் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகள் 30-35 சதவீத வாக்குகளுடன் ஆட்சியமைப்பதை நாம் காண்கிறோம்," என்றார்.

அவ்வாறான வாக்கு சரிவே திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் குறைவதற்கான அடிப்படையாக அமையும் என்றும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மாற்றம் தெளிவாகக் காணப்படும் என அண்ணாமலை கூறினார். 2026க்குப் பிறகும் தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி தொடரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேநேரத்தில், தனது படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ஆம் தேதி தமிழகம் திரும்புவதாகவும், அதன்பிறகு நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளிலும், முக்கிய கட்சித் திட்டங்களிலும் கலந்து கொள்வதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dravidian parties will lose dominance in Tamil Nadu New change by 2031 BJP leader Annamalai comments


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->