மருத்துவமனையில் டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இதற்காக அவர் நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து நெல்லையுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு உடல் பரிசோதனை, கொரோன பரிசோதனை மேற்கொண்டனர்.

மருத்துவர்கள் அவருக்கு மேற்கொண்ட உடல் பரிசோதனையில் அதிகப்படியான காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அவரின் உடல்நிலை, கொரோன பரிசோதனை குறித்தான மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. டாக்டர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களுக்கு அதிர்ச்சியையம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy admitted to the hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->