எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் தைரியம் - ஸ்டாலினுக்கு இல்லாதது ஏன்?.. டாக்டர்.கிருஷ்ணசாமி கேள்வி..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதன் ஒரு பகுதியாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பேசினார்.

அதிமுக வேட்பாளர் அறிமுக விழா மேடையில் பேசிய அவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக மு.க ஸ்டாலின் காங்கிரஸ் பின்னால் ஒளிந்து கொண்டதாக விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து விழா மேடையில் டாக்டர்.கிருஷ்ணசாமி பேசியதாவது "அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சவாலாக ஏற்றுக்கொள்கிறேன் என கூறி அதிமுக வேட்பாளரை களம் இறக்கிய பழனிச்சாமியின் தைரியம் எங்கே..?

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி காங்கிரஸ் பின்னால் ஒளிந்து கொண்ட ஸ்டாலின் தைரியம் எங்கே..? என்று தான் கேட்க விரும்புகிறேன். அதிமுகவின் வெற்றி என்பது 27ஆம் தேதி அல்ல வேட்பாளரை தேர்வு செய்யும் பொழுதே உறுதியாகிவிட்டது" என விழா மேடையில் தமிழக முதல் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy criticizes Stalin hiding behind Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->