முறித்துக்கொண்ட அதிமுக! புதிய தமிழகம் யாருடன் கூட்டணி? Dr.கிருஷ்ணசாமியின் சூசகம்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. 

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். பாஜகவின் டெல்லி தலைமை அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் இணைய வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் அடிப்படையில் அதிமுகவை மீண்டும் பாஜகவுடன் இணைக்க டாக்டர் கிருஷ்ணசாமி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைப்பதற்கு சாத்தியமில்லை எனவும், இனி வரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவை தலைமை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இன்று கோவில்பட்டியில் செய்தியாளராக சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி "பாஜகவுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என அதிமுக திட்டவட்டமாக கூறும் போது நான் முயற்சி எடுப்பது பயனளிக்காது. 

புதிய தமிழகம் கட்சி தென் மாவட்டங்களில் 14 முதல் 20 தொகுதிகளில் வலுவாக உள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சியை நாடாளுமன்றத்தில் உறுதிபட எடுத்துரைக்கும் வகையில் எங்களது கூட்டணி அமையும்'' என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இதற்கு காரணம் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி முனுசாமி தமிழக உரிமைகளை நாடாளுமன்றத்தில் வலுவாக எடுத்துரைக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணி செயல்படும் என தெரிவித்திருந்தார். புதிய தமிழகம் எதிர்பார்க்கும் தொகுதியில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy said he is not trying to merge AIADMK BJP alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->