இது வரலாற்று பிழை.. "மோடியை எதிர்க்க துணிவில்லை"..!! திமுகவை வறுத்தெடுத்த டாக்டர் கிருஷ்ணசாமி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

அதன்படி சட்டப்பேரவை வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்தவர்களோடு திமுகவை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆளுநருக்கு எதிரான தீர்மானம்! மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக!!

ஆளுநர்கள் ‘வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல', அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் மாண்புமிகு ஆளுநர் R.N. ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் இயலவில்லை. மோடியை நேரடியாக எதிர்க்கும் துணிவு இல்லாததால் 'ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதற்கு இணங்க ஆளுநரை இலக்காக்கி மோடி எதிர்ப்பாளராக தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள்.

இந்தியஅரசியல் சாசனம் எவருக்கும் சர்வ அதிகாரத்தை வழங்கவில்லை! எல்லா அதிகார அமைப்புக்களும் ‘check and balance’ என்ற உயரிய அடிப்படை தத்துவத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம் திமுக வரலாற்று பிழை செய்துள்ளது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnaswamy severely criticized DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->