ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாக,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரும்படி சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்!

மருத்துவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு எதிராக மருத்துவப் பணியாளர்கள் போராடி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படியும்  நேற்று வலியுறுத்தியிருந்தேன். ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!

மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் தீர்வு தற்காலிகமானதாக இருக்கக் கூடாது.  அனைத்து அம்மா கிளினிக் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தி அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About Amma Mini Clinic Staffs issue jan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->