முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத் எம்.பி அந்த ரகசியம் என்ன.?! சந்திப்பில் பேசப்பட்டது என்ன?
duraimurugan say about ops son and cm meet
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போது, திமுக ஆட்சியை பாராட்டியதாக அமைச்சர் துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டார் என்று ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து தி.மு.க. கூட்டம் ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசுவதுபோல உள்ள அந்த பதிவில், "நானும் முதல்வரும் அறையில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்தார்.
அவர் எம்.பி. என்பதால் வரச்சொல்லுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார். அவர் உள்ளே வந்ததும் முதல்வருக்கு துண்டு போட்டார். ஒரு புத்தகம் ஒன்றையும் கொடுத்தார்.
பின்னர், 'நீங்க ரொம்ப நல்லா ஆட்சி நடத்துறீங்க. ஆட்சி நல்லா இருக்குதுய்யா' என்று தெரிவித்தார்" என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதாக சொல்லப்படுகிறது.
இது சமூகவலைத்தளங்களில் பரவி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
duraimurugan say about ops son and cm meet