"இந்தியாவில் அது இல்லை" சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கான பதில்! நிதி அமைச்சரிடம் மக்கள் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் நாளுக்கு நாள் அன்றாட பொருள்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக பெட்ரோல் டீசல்  மற்றும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது.

இதனால் பொதுமக்கள் ஆளும் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். குறிப்பாக சமையல் எரிவாயுவின் ஏற்றம்  இல்லத்தரசிகளை கடும் கோபம் கொள்ள செய்து இருக்கிறது. சமையல் விரிவாயுவின் விலை ஏற்றத்தால் அவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினரை சந்திக்க வந்தார். இப்போது அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள்  அவரிடம் சரமாரியாக விலை ஏற்றம் பற்றி கேள்விகளை முன் வைத்தனர். குறிப்பாக சமையல் எரிவாயுவை பற்றிய கேள்விகளே அதிகமாக இருந்தது.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர்  இந்தியாவில் சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாததால் தான் அவற்றின் விலையேற்றம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் மானியம் வழங்குவதற்கு போதுமான நிதி அரசாங்கத்திடம் இல்லாததால் கூடுதல் மானியம் வழங்க முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்த பதில் மக்களுக்கு திருப்திகரமானதாக இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during a bjp meeting finance minister was surrounded by pubic and theyquestion her about the sky rocketing hike in lpg price


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->