கிழட்டு நாயே! உயிரோட இருக்க முடியாது! வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


அரசு வேலை வாங்கித் தருவதாக 65 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரின் மகள் மீது, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சேலத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முனுசாமி அளித்த அந்த புகாரில், "ஆதி திராவிட நலத்துறையின் முன்னாள் அமைச்சரான சுப்பிரமணியன், சமையல் பணிக்கு 20 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சுப்பிரமணியன் 65 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். 

வேலை வாங்கி தராத நிலையில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தன்னை, திமுக ஆட்சிக்கு வந்ததால் பணத்தை கேட்கிறாயா? ஏன்டா கிழட்டு நாயே, உன்னை லாரி ஏற்றி கொன்று விடுவேன். 

உனக்கு உயிர் முக்கியமா? இல்லை பணம் முக்கியமா? நீயே முடிவு செய்து கொள். என்னை தேடி வந்தால், நீ திருப்பி உயிருடன் செல்ல மாட்டாய். 

என் மீது வழக்கு தொடர்ந்தால், உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன்" என்று சுப்பிரமணியன் மிரட்டியதாக முனுசாமி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியன் மற்றும் அவரின் மகள் லாவண்யா மீது ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC case ADMK Ex Minister Subramaniyan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->