கோவில்பட்டியில் பயங்கரம்!...வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்!...முன்விரோதத்தால் படுகொலை? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் கட்டிட தொழில் வேலை பார்த்து வந்த நிலையில், இவர் அப்பகுதியில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வெளியே சென்ற பாண்டியராஜ் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிச் சென்ற போது, கண்மாய் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பாண்டியராஜ் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து கதறி அழுத அவரது குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாண்டியராஜின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முன்விரோத காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terror in kovilpatti dead body of teenager recovered with cuts massacre due to enmity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->