இனி ரூ.12000! துணை முதல்வர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!
DYCM Udhay Announce Chennai Press club
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பத்திரிகையாளர் மன்றத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை, சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். அப்போது உரையாற்றிய அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில், பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இது, ஊடகவியலாளர்களின் நலனுக்காக அரசு எடுத்துள்ள வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
தொடர்ந்து அவர், “பத்திரிகையாளர் சமூகத்தின் பங்களிப்பு சமூகத்தின் ஒளிவிழியாகும். அவர்களின் வேலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது” எனவும் கூறினார்.
English Summary
DYCM Udhay Announce Chennai Press club