ரூ.30 கோடி! சிக்கினாரா திமுக அமைச்சரின் சகோதரர்? அலுவலகத்தில் வைத்து விசாரணை!
DMK Minister KN Nehru ED Raid
நேற்று (07.04.2025) காலை 6 மணி முதல் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 20-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரிவான சோதனையைத் தொடங்கினர்.
சென்னை அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், கோவையில் உள்ள மசக்காளிபாளையம் பகுதியில் செயல்படும் அவரின் கட்டுமான நிறுவனத்திலும் இந்த சோதனைகள் நடந்தன.
கே.என். ரவிச்சந்திரனின் வங்கிக் கணக்குகளில் நிகழ்ந்த அதிக அளவிலான பண பரிவர்த்தனைகள் இந்த சோதனையின் தூண்டிகையாக இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் ₹30 கோடி மதிப்புள்ள சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், அமைச்சர் நேருவின் மகன், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும், திருச்சியில் உள்ள அமைச்சர் நேருவின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேரம் நீண்ட சோதனை நேருவின் இல்லத்தில் மாலை நிறைவடைந்தது. முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்றும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர். ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
DMK Minister KN Nehru ED Raid