அமித் ஷா ஸ்ரீநகர் விஜயம்; ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து 03 அமைப்புகள் விலகல்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனை முன்னிட்டு, பாகிஸ்தான் ஆதரவு ஹூரியத் அமைப்பில் இருந்து மேலும் 03 அமைப்புகள் இன்று விலகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு கட்சிகள், அமைப்புகளின் கூடாரமாக ஹூரியத் அமைப்பு இருந்து வருகிறது. 1993-இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 26 அமைப்புகள் இடம் பெற்றிருந்தனர்.

காலப்போக்கில் இரண்டாக பிளவுபட்டது இந்த அமைப்பு. இந்த அமைப்பில் பெரும்பாலான அமைப்பினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், மத்திய அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

அத்துடன், கடந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஹூரியத் அமைப்பில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். அத்துடன், வாக்காளர்கள் பங்கேற்பும் அதிக எண்ணிக்கையில் இருந்தது.

இதன் காரணமாக, ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் விலகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் வருகைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, மூன்று அமைப்பினர் ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதில், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய அரசியல் கட்சி, ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும், தாங்கள் அந்த கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனை அமித் ஷா தனது  சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah visits Srinagar 03 organizations withdraw from Hurriyat Alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->