துணை முதல்வர் உதயநிதியை சோகத்தில் ஆழ்த்திய மரண செய்தி! - Seithipunal
Seithipunal


எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தினை கொண்டிருந்த எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து வருத்தமுற்றோம்.

தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள் உள்ளிட்ட படைப்புகளை தந்தவர். பொருநை இலக்கியத் திருவிழா - நெல்லை புத்தகத்திருவிழா உள்ளிட்டவற்றிற்காக முக்கிய பங்காற்றியவர்.

எழுத்தாளராக மட்டுமன்றி சமூக செயற்பாட்டாளராகவும் பல்வேறு பங்களிப்பினை செய்த திரு.நாறும்பூநாதன் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார் - உறவினர்கள் - நண்பர்கள் - வாசகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DyCM Udhay Condolance to Writter NarumPoothanathan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->