மத்திய அரசின் உத்தரவு, ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள் - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


100 யூனிட் இலவசம், மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க தமிழக அரசின் மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகை தாரர்களிடன் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்டவைகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே நுகர்வோர் அச்சப்பட தேவையில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் வீட்டு நுகர்வோர், குடிசை நுகர்வோர், பொது வழிபாட்டுத்தலங்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள் உள்ளிட்ட அரசின் மானியம் பெரும் நுகர்வோர்கள், கண்டிப்பாக தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EB Connection And Aadhar Number Connect


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->