திமுக அமைச்சர, எம்.பி வீட்டில் ED ரெய்டு!
ED Raid in DMK MP and Minister
வேலூர்: காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான வீடு, ஆந்திர எல்லையோரம் உள்ள கிறிஸ்டியான் பேட்டையில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர், அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி பகுதியயில் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
English Summary
ED Raid in DMK MP and Minister