எடப்பாடி மீதான மான நஷ்ட ஈடு வழக்கு!...சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ் பாரதியின் மான நஷ்ட ஈடு வழக்கில், எடப்பாடி பழனிசாமி ஒரு வார காலத்திற்குள் வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மான நஷ்ட ஈடு ரூ.1 கோடி வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை  திமுகவுடன் இணைத்து பதிவிட்டதாக இந்த வழக்கினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi compensation case chennai high court action order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->