வளர்மதிக்கு கேக் ஊட்டிய எடப்பாடி.. மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருவரும் இணைந்து கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டி விட்டனர். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்றதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர் ராஜா இருவரும் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi fed cake to Valarmati Women's Day Special Video Viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->