இபிஎஸ் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்.!
Edappadi Palaniswami election campaign change
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பிலும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், மார்ச் 28ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 8 ஆம் தேதி சுற்றுப்பயணம் திட்டம் மட்டும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வருகின்ற 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விருதுநகர் மற்றும் இரவு 7 மணிக்கு சிவகாசியில் பழங்காநத்தம் மற்றும் மதுரையில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடி, இரவு 8 மணிக்கு இராமநாதபுரம் அரண்மனையில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாதம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Edappadi Palaniswami election campaign change