சந்தி சிரிக்கிறது... அண்ணாமலை ஒரு பச்சோந்தி - உச்சகட்ட கோவத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகிற சூழல் இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாவது, "ஆட்டை வெட்டுவது போல, மனித உயிர்களை சர்வ சாதாரணமாக வெட்டி சாய்க்கின்றனர்.

அண்மை காலமாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். நெல்லையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார், சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. இது போன்ற சம்பவங்கள் பொது மக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது" என்றார்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, "துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை, அவர் ஒரு பச்சோந்தி.

நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.

நான் கிளை செயலாளராக இருந்து முதல்வராக வந்தவன். கட்சியில் படிப்படியாக ஒவ்வொரு மட்டத்தில் இருந்து வந்தேன்''

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அண்ணாமலை நியமிக்கப்பட்டவர். பேசுவதற்கு முன் அண்ணாமலை கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadik Palaniswami AIADMK Annamalai BJP and TNgovt Law and Order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->