திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!! - Seithipunal
Seithipunal


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதி தொடர்புடைய 35 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதே போன்று ஜாபர் சாதிக்கிற்கு நெருங்கிய நண்பரும் பிரபல திரைப்பட இயக்குனருமான அமிரின் அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை பாண்டி பஜாரில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

மேலும் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் ஆக இருக்கும் சிற்றரசுவின் அலுவலகத்திற்கு கீழ் உள்ள கொரியர் கம்பெனியில் மத்திய போதைப் போல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை செய்ய முயற்சித்த போது செய்தியாளர் மீது தாக்கிய சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசுவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திமுகவின் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசுவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edraid in Chennai DMK district secretary house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->