தேர்தல் பத்திரங்கள் வழக்கு அக்.31 முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியை முறைப்படுத்தும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் குடிமகன் அல்லது இந்தியாவில் செயல்படும் ஒரு அமைப்பு பத்திரத்தை வாங்க தகுதியானவர்கள். நிதிச் சட்டம், 2017 மூலம் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன . இந்தப் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு கடந்த 2017ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்-1934, வருமான வரிச் சட்டம்-1961, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 திருத்தப்பட்டன.

அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற, கட்டுப்பாடற்ற நிதியுதவிக்கான கதவுகளைத் திறந்துவிட்டதால் நிதிச் சட்டம், 2017 மூலம் பல்வேறு சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன . இந்த நிதிச் சட்டம், மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லாத பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.

இதனால், நிதிச்சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்ற முடியாது என அந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும் 2021ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு தடை கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி விசாரணையின் போது இந்த வழக்கை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றலாமா என நீதிமன்றம் விவாதித்தது. விசாரணையின் முடிவில் பண மசோதாவாக சட்டங்களை இயற்றுவது தொடர்பான பிரச்சினை காரணமாக அதை அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்ப நீதிமன்றம் முடிவு செய்தது.

இந்த வழக்கு அக்.31ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு வரும் அக்டோபர் 31ஆம் தேதி விசாரிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election bonds case changed to constitution Session


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->