செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகளை தேர்தல் கமிஷன் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2,100க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி இருப்பதாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதி மீறல் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்தந்த மாநிலங்களில் தலைமை தேர்தல் அதிகாரி கள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த 87 கட்சிகளையும் தேர்தல் கமிஷன் பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

விதிமீறல் உள்ளிட்டவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission announces dismissal of 87 non-functioning parties


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->