#BREAKING || திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், மநீம, அமமுக, தேமுதிக முன்னிலை நிலவரங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியை பொருத்தவரை தாம்பரம், சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாகர்கோயில், கரூர், ஓசூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, ஆவடி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. அதே சமயத்தில் சிவகாசியில் அதிமுக 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி, மொத்தமாக 21 மாநகராட்சிகளில், திமுக 19 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல், 138 நகராட்சிகளில் 74 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது, அதிமுக நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பேரூராட்சிகளில் திமுக 29 இடங்களிலும், அதிமுக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மாநகராட்சியை வார்டுகளில் திமுக 197 இடங்களிலும், நகராட்சி வார்டுகளில் 506 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அதிமுக 25 மாநகராட்சி வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சிகளில் 112 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சி மாநகராட்சிகளில் இரண்டில் முன்னிலையில் பெற்றுள்ளது, நகராட்சிகளில் 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மாநகராட்சி வார்டுகள் 4 இடங்களிலும், நகராட்சிகளில் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

நகராட்சியில் மட்டும் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலா  ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

பேரூராட்சி பொறுத்தவரை திமுக 881 இடங்களிலும் அதிமுக 231 இடங்களிலும், பாமக 12 இடங்களிலும், தேமுதிக 9 இடங்களிலும். பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 212 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election leadin result in 2022 10am


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->