"சாதி வாரியாக" உத்தரவு போட்டது நாங்க.. அதை தடுத்தது நீங்க.! - போட்டுத் தாக்கிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல் இன்னும் நான்கு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். குறிப்பாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அந்த ஆணையத்திற்கான காலத்தை நீட்டிக்கவில்லை. இதனால் அந்த ஆணையத்தின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டது. சமூக நீதி பற்றி பேசும் மு.க ஸ்டாலின் ஏன் சாதி வாரிய கணக்கெடுப்பப்பு நடத்தவில்லை. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதை தடுக்க நினைக்கிறார்கள். சமூக காக்கும் ஒரே கட்சி அதிமுக தான்" என பிரச்சார மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS accused DMK shelving aiadmk caste census order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->