#BREAKING: அதிமுகவின் அடுத்த அதிரடி... 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் இபிஎஸ்..!!
EPS announced 106 member Election Working Committee for erode East
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான 106 பேர் கொண்ட பணிக்குழு பட்டியலை அறிவித்துள்ளார். இந்த பணிக்குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் என 106 பேர் கொண்ட பட்டியலை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 27 2.2023 அன்று நடைபெற உள்ளது முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கழக அமைப்புச் செயலாளரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் என 106 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே ஆளுங்கட்சியான திமுக தமிழக அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பணி குழுவை அமைத்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்தல் பணிக்குழு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்த தொடங்கியுள்ளது.
English Summary
EPS announced 106 member Election Working Committee for erode East