சிறுமி நேர்ந்த கொடுமை .. கொந்தளித்த எடப்பாடி.. பிப்.1ல் தமிழகமே ஸ்தம்பிக்க போகுது.!! - Seithipunal
Seithipunal


பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெரினா ஆகியோர் வீட்டில் வேலை செய்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரேக்காவை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியதால் காயமடைந்த அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளம்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் விசாரணை நடத்த காவல்துறையினர் நேரில் சென்ற போது திமுக எம்எல்ஏ மகன், மருமகள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில் தாங்கள் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி சென்னை உயர்மன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனால்  இருவரும் நீதிமன்றத்திலேயே சரணடையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகனையும், மருமகளையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, கொத்தடிமை முறையை ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏ குடும்பம் நடைமுறைப்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eps announced protest against dmk mkstalin on feb11


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->