திருமண மண்டபங்களில் அனுமதி.. "திராவகத்தை வீசியுள்ள திராவக அரசு".. ஈபிஎஸ் கொந்தளிப்பு ..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் திருமண மண்டபங்கள் விளையாட்டை மைதானங்கள் மற்றும் சமூக கூடங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்கள் பரிமாறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் ஒரு நாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட சிறப்பான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெளிவாக திருமண மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டதோடு அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம்  என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். 

மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS Condemns Allowing Liquor in Marriage Halls


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->