மீனவ மக்கள் உயிருக்கு பயந்து.. கும்பகர்ண தூக்கத்தில் திமுக அரசு.! ரவுண்டு கட்டிய எடப்பாடி பழனிச்சாமி.!! - Seithipunal
Seithipunal


சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா திரவ வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிப்படைந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும்,அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "வட சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய அமோனியத்தை நேரடியாகக் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் அமோனியம் குழாய் 26.12.2023 அன்று நள்ளிரவில் வெடித்துச் சிதறியதாகவும், அமோனியம் காற்றில் கலந்து பரவத் தொடங்கியதால் தொழிற்சாலைக்கு அருகே உள்ள மீனவ கிராமங்களான பெரிய குப்பம், சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றில் பரவிய அம்மோனியாவை சுவாசித்தபோது அப்பகுதியில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் உயிருக்கு பயந்து தங்களது உடைமைகளைக்கூட எடுத்துச் செல்லாமல், அவர்களுக்கு தங்கும் வசதி கூட செய்யப்படாத நிலையில், குளிரில் ஆங்காங்கே தங்கள் குழந்தைகளுடன் நேற்று இரவு  தஞ்சம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


மூச்சுத் திணறலாலும் மயக்கத்தினாலும்  40க்கும் மேற்பட்ட மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சென்னை பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்த கச்சா எண்ணெய் மழை வெள்ளத்திலும் கடலிலும் கலந்து மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும், மீனவ மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இனியாவது மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் தங்களது பணிகளை துரிதமாகவும் பொறுப்புடனும் செய்திட வலியுறுத்தியிருந்தேன்.


எனது ஆலோசனையின்படி, இந்த விடியா திமுக அரசு செயல்பட்டு, உடனடியாக மாசு கட்டுபாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தால், நேற்று நள்ளிரவு கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நடைபெற்ற அம்மோனியம் வாயு கசிவு விபத்து நடைபெற்றிருக்காது. ஆனால், எப்போதும்போல் விடியா திமுக அரசு எங்களது ஆரோக்கியமான ஆலோசனைகளை காது கொடுத்து கேட்காதது போல், மேலே குறிப்பிட்ட எனது ஆலோசனையையும் காற்றிலே பறக்கவிட்டது.

ஏறத்தாழ இதுபோன்றே 40 ஆண்டுகளுக்கு முன் போபால் பூச்சிக்கொல்லி -உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து போன்றதுதான் இதுவும். கடவுள் அருளால் நேற்று நள்ளிரவு விஷ வாயு வெளியேறிய ஏற்பட்ட விபத்தில், உயிர்பலிகள் இல்லாமல் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இனியாவது விடியா திமுக அரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வலியுறுத்துகிறேன்" என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps criticized dmkgovt mkstalin in ennore issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->