ஸ்டாலின் அவர்களே... மீசை வச்ச, வேட்டி கட்டுன ஆம்பளையா..? அதிமுக பிரச்சார கூட்டத்தில் எகிறிய எடப்பாடி..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் பகுதியில் இன்று தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது பேசிய அவர் திமுகவையும் அதன் கட்சித் தலைவர் ஸ்டாலினையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது பேசிய அவர் "கிராமத்தில் தான் ஆடு மாடுகளை அடைத்து வைப்பார்கள். ஆனால் இப்பொழுது நமது தொகுதி வாக்காள பெருமக்களின் குடும்ப சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்ட திமுகவினர் ஒரு கொட்டகை அமைத்து அதில் அவர்களை அமர வைத்துள்ளனர்.

திமுகவினர் வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீ சரியான ஆம்பளையா இருந்தா..? வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா..? சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தா..? வாக்காளர்களை நேரடியாக களத்தில் சந்திக்க வேண்டும். 

அவர்களுக்கு திராணி இல்ல, தெம்பு இல்ல, எதிர்க்க சக்தி இல்லை. அதிமுகவை எதிர்க்க அவர்களுக்கு சக்தி இல்லை. அவர்களின் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு ஏழை மக்களை கூட்டி வந்து 120 இடங்களில் கொட்டகை அமைத்து அடைத்து வைத்துள்ளனர்.

நான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்ததால் திமுக அமைச்சர்கள் கொள்ளை அடித்த பணம் ரூ.2000 ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளது. இதில் எனக்கு மிக்க சந்தோஷம் மகிழ்ச்சி. ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பணம் போய் சேர்ந்தது. மக்களை ஏமாற்றி பிடுங்கிய பணம் மீண்டும் மக்களிடம் போய் சேர்ந்து விட்டது. இரண்டு வேளை பிரியாணி தருகிறார்கள். திருப்தியாக சாப்பிட்டு விட்டு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்கு மட்டும் இரட்டை இலை சின்னத்திற்கு செலுத்தி விடுங்கள்" என பிரச்சாரம் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS criticizes DMK in Erode East byelection campaign meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->