ஊடகங்கள் தான் திமுகவுக்கு பாதுகாப்பு.. "நீங்க கேட்ட கேள்வியே தவறு"..! எடப்பாடி பழனிச்சாமியின் நெத்தியடி பதில்..!! - Seithipunal
Seithipunal


சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பூத் கமிட்டி அமைப்பது,  பூத் வாரியாக புதிய மகளிர் அணி, இளம் பெண்கள் பாசறை அமைப்பது, எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளீர்கள். தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கி சரிந்ததன் காரணமாக மதுரையை தேர்ந்தெடுத்து உள்ளீர்களா..? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "உங்களுடைய கேள்வியே தவறான கேள்வி. அதிமுக இழந்த வாக்கு என்று எதுவும் கிடையாது. எங்களுக்கு ஏற்கனவே நிலையான வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று. திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறதா..? இல்லையே. நாங்கள் இவ்வளவு சோதனையிலும் 75 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

எங்களுக்கு பலவீனம் என்பதே கிடையாது. ஆட்சி மாற்றம் என்பது மக்கள் எடுத்து இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் தானே தவிர வேறு எதுவும் கிடையாது. இன்று திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என தமிழக முழுவதும் மக்களின் குரல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. எனவே தயவு செய்து திமுகவை தூக்கி பிடிக்க வேண்டாம். 

இன்று தேர்தல் வந்தாலும் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறும். திமுகவுக்கு பாதுகாப்பாக இருப்பது ஊடகங்களும், பத்திரிகைகளும் தான். அந்த பாதுகாப்பில் தான் திமுக காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார். 

மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது. என்னுடைய ஆட்சி நான்கரை ஆண்டுகள். அதற்கு முன்பு ஐந்தரை ஆண்டு காலம் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி இருந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்தில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் தமிழகம் எந்த அளவிற்கு ஏற்றம் அடைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரே அரசாங்கம் அதிமுக தலைமையிலான அரசாங்கம் மட்டும்தான்" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS opined that media is DMKs security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->