நடிகர் மயில்சாமி மறைவு - எடப்பாடிபழனிச்சாமி, ஓபிஎஸ், டிடிவி இரங்கல்! - Seithipunal
Seithipunal


சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய நடிகர் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு மரணமடைந்தார்.

நடிகர் மயில்சாமியின் மறைவைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி : நடிகர் மயில்சாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, துயரத்தை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.


முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி : தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் ஆர்.மயில்சாமி அவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 

மக்களின் மனங்களில் நீங்க இடம் பிடித்த இவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி : பிரபல நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர். அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர்.

இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS OPS TTV Mourning to Mayilsamy Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->