நேற்று அரங்கேறிய சம்பவம் - பேட்டியின்போதே வருத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal



அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் முதல்முறையாக எடப்பாடி கே பழனிசாமி, இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து பொருட்களை அடித்து, நொறுக்கி சேதப்படுத்திய சமபவத்தில் நாங்கள் நீதிமன்றத்தை நாடி உத்தரவு வாங்கிய பிறகு, தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுகின்ற திமுக அரசாங்கத்தோடு, முதல்வர் ஸ்டாலினோடு கூட்டு வைத்துக் கொண்ட ஓ பன்னீர்செல்வம் தான் அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சமபத்திற்கு காரணம். ஓபிஎஸ் திமுகவின் பினாமி.

ஓபிஎஸ் பச்சோந்தியை விட அதிக நிறம் மாறக் கூடியவர். கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, ஜெயலலிதாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டவர். 

திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டது. இன்று வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

இது குறித்து ஊடகங்கள் தான் திமுகவினரை கேள்வி கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒன்றும் செய்யாத இந்த முதல்வர் ஸ்டாலினை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். திமுக ஆட்சியை மக்கள் கைவிட்டுவிட்டனர். இன்று தமிழகம் முழுவதும் கஞ்சா, போதை, ஆன்லைன் ரம்மி இப்படியாக பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு போய் உள்ளது.

நேற்று வருந்தத்தக்க ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பொறியியல் படித்த மாணவன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாணவன் வழிப்பறியில் ஈடுபடக் காரணம், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழந்த பணத்திற்காகவும், மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக இந்த வழிப்பறி சம்பவத்தில் அந்த மாணவன் ஈடுபட்டுள்ளார்.

எனவே இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வதற்கு உண்டான நடவடிக்கையை உடனே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" " என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS press meet in ADMK head office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->