4 நாட்களில் 15 குற்றச்சம்பவங்கள்.! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.!! ஸ்டாலினை வெளுத்த ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் கால்வல் துறையினரின் கைகளை திறனற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் கட்டி போட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்கு காணினும் சக்தியடா" என்று மகாகவி பாரதி பாடிய நம் தாய் திருநாட்டில் இந்த விடியோ தி.மு.கவின் அலங்கோல ஆட்சியில் எங்கெங்கும் காணினும் குற்ற செயல்களாக இருப்பது வெட்கி தலைகுனிய வைக்கிறது. ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை. மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும் அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும்.

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் வீச்சு, கத்தியால் வெட்டி கொலை, செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளி கொலை, சாலையில் செல்லும் பெண்ணிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் இது போன்ற அராஜகமான நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஊடகங்களில் வெளிவந்த குற்றச்சம்பவங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

1. ஆளும் கட்சியின் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லாத்தூர் கிராமத்தில் தனது நிர்வாகியின் இல்ல விழாவிற்கு சென்றபோது பெட்ரோல் குண்டு வீசிய பரபரப்பு சம்பவம்.

2. செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வழக்கிற்காக வந்த லோகேஷ் என்பவரை பெட்ரோல் குண்டு வீசி ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம்.

3. கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.

4. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிய பட்டியில் டிஜிட்டல் விளம்பர போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.

5. அரசியல் கட்சியைச் சேர்ந்த நகர செயலாளர் நாகராஜ் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இரவு நின்று கொண்டிருந்தபோது சமூகவிரோத கும்பலால் அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

6. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டாஸ்மாக் கடையின் விற்பனை பணம் சுமார் 6.50 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களை கொடூரமாக ஆயுதங்களால் வெட்டிய சம்பவம்.

7. ண திருச்சி முசிறி வட்டம் சுக்காம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தீபக் என்ற வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை. 

8. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி பிரிவு சாலையில் குப்புசாமி மற்றும் அவரது மகன் மாரிமுத்து ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் கொடிய ஆயுதங்களால் வெட்டி குமாரசாமி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

9. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பாலாஜி நகரை சேர்ந்த விவசாயி சிவராம் அவர்கள் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மிளகாய் பொடி தூவி அறிவாளால் அவரை வெட்டி கொண்டுள்ளனர்.

10. சென்னையில் கல்லூரி மாணவி அஸ்மிதா நந்தம்பாக்கம் ஏழு கிணறு தெருவில் நடந்து வந்தபோது நவீன் என்பவர் கத்தியால் குத்தி படுகாயம்.

11. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சின்ன செக்குணம் பகுதியைச் சேர்ந்த பூசாரி காமராஜ் அவர்களை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை.

12. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி அருணாச்சலம் என்பவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை.

13. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி திருமதி வளர்மதி அவர்கள் நகைக்காக படுகொலை.

14. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக பிரகாஷ் என்பவர் கல்லால் அடித்துக் கொலை.

15. சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற 22 வயது இளம்பெண்ணிடம் வழிபறி திருடர்கள் செல்போனை பறிக்கும் முயன்ற போது ப்ரீத்தி ரயிலில் இருந்து தள்ளப்பட்டு கொலையான சம்பவம். ஒரு செல்போனுக்காக 22 வயது பெண்ணின் உயிர் பலியான சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, இந்த விடிய அரசு பதவி ஏற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போதை பொருள் விற்பனை முதியவர்கள் குறிவைத்து தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று பேட்டியின், வாயிலாகவும், அறிக்கையின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் நான் எடுத்து வைத்து வருகிறேன். 

எனினும் இந்த விடியா திமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. மக்களை காப்பாற்ற துப்பில்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாமல், காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தாமல் அம்மாவின் அரசியல் எப்படி காவல்துறை சட்டப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ அதுபோல் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS report Law and order is broken in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->