கள்ளக்குறிச்சி கலரவரத்துக்கு முழு காரணம் ஸ்டாலின் அரசும், காவல்துறையும் தான் - எடப்பாடி கே பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி, அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தனியார் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ஜூலை 13-ஆம் தேதி பள்ளி நிர்வாகம்   தெரிவித்துள்ளது. மாணவியின் தாயார் அவரது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் சரிவர பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மாணவி ஸ்ரீமதி இறந்த பிறகு பள்ளி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அல்லது அரசாங்கமோ அந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. 

இந்த விவகாரத்தில் அரசு செயலிழந்து விட்டது. இதற்கு முழு பொறுப்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். கடந்த மூன்று நாட்களாக மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு செவி சாய்க்கவில்லை" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS SAY ABOUT KALLAKURICHI Violence


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->