சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி.. எங்கள் கொள்கையே வேறு.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் "ரமலான் நோன்பு மேற்கொண்டுள்ள அனைவருக்கும் என் அன்பை பகிர்ந்து கொள்கிறேன். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிறுபான்மை இன மக்களை எவ்வித சமரசங்களும் இன்றி பாதுகாத்து வந்துள்ளனர்.

அதே வழியில் எப்போதும் செயல்படுவோம். சில அரசியல் கட்சிகளைப் போல சிறுபான்மை இன மக்களை ஓட்டுக்காக பயன்படுத்தும் கட்சி அதிமுக இல்லை. சிறுபான்மை மக்கள் உணர்வோடு ஒன்றி பிணைந்தது அதிமுக. அதிமுகவின் கொள்கை வேறு கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது இனிசியல் போன்றது. கொள்கையை யாராலும் மாற்ற முடியாது. 

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம். ஆனால் கொள்கை வேறு என்ற தெளிவு எப்பொழுதும் எங்களுக்கு உண்டு" என விழா மேடையில் பேசியுள்ளார். இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS speech at iftar party in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->