மோடியின் கண்ணியம் தவறிய பேச்சு.. கொதித்துப்போன ஈ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்பரையின் போது இஸ்லாமியர்கள் குறித்து நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் அரசியலுக்காக இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் நரேந்திர மோடி பேசியுள்ளதாக நரேந்திர மோடி மீது சிபிஎம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும் வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டின் உயர்வு ஆட்சி பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனம் புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணத்திற்கும் நல்லது. 

அரசியல் கட்சித் தலைவர்களின் இது போன்ற சர்ச்சை கருத்துக்களால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் மத உணர்வுகளை தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறி இது போன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டில் நலனுக்காக இது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்" என கருத்து தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps statment on Modi hate speech against Muslims


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->