ஆட்சிக் கலைப்பா? தொகுதி பங்கீடா? ஈபிஎஸ் நாளை டெல்லி பயணம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளார்.

கடந்த கடந்த மாதம் 20ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாநில மாநாடு பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலோடு சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ளும் வகையில் தயாராக வேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

மேலும் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றால் அதற்கு ஏற்றார் போல் பூத் கமிட்டி அமைப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் இடங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது, அமைப்பு ரீதியில் தற்போது இருக்கும் மாவட்டங்களை மேலும் பிரித்து 90 முதல் 100 மாவட்டங்களாக பிரித்து இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமிப்பது உள்ளிட்ட கட்சி ரீதியில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளார். இந்த டெல்லி பயணத்தின் போது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை தனித்தனியே நேரில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்து மதிப்பு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்திட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS visits Delhi tomorrow to meet Amit Shah JP Nadda


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->