ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. முதல் சுற்று முடிவு.. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 75 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல், போட்டியாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான ஒட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தற்போதைய முன்னிலை நிலவரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார்.

காங்கிரஸ் (திமுக) - 1236

அதிமுக - 348

நாம் தமிழர் -19

தேமுதிக -10


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election Congress candidate Elangovan lead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->