ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. விவசாயிகளின் ஆதரவு யாருக்கு.? - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தை தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக கட்சியில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்து போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு விவசாயிகள் ஆதரவு இல்லை என்று தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மார்ச் 21ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election formers not BJP alliance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->