ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.!
Erode by election Last day of nomination
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியதால் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அதேபோன்று அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக போன்ற இதர கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.31ம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசிலனை நடைபெற்று அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலில் பல்வேறு அரசியல் கட்சிகள் வீட்டுமனை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ்,தேமுதிக, நாதக, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 67 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். அதிமுக ஈபிஎஸ் இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
English Summary
Erode by election Last day of nomination