ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியதால் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அதேபோன்று தேமுதிக, நாம் தமிழர், அமமுக போன்ற இதர கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன. 

இதில் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பிரிவுகளாக பிளவுபட்டு தனித்தனியே போட்டியிடுகின்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த தமாக போட்டியிட்ட நிலையில் தற்போது அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஈபிஎஸ் சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கிறார். இன்று காலை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை தங்கள் வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election OPS candidate announce today evening


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->