ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பலத்த பாதுகாப்புகளுடன் இன்று வாக்குப்பதிவு.!
Erode East by election vote polling today
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனிடையே வேட்புமனு மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி சுமார் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 வாக்காளர்களும் என மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர்கள் அனைவரும் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.
English Summary
Erode East by election vote polling today