"நாம் தமிழர்ன்னு கட்சி இருப்பதே தெரியாது." - ஈவிகேஎஸ் இளங்கோவன் நக்கல் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே வேட்புமனு மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதில், மூன்றாவதாக நாதக - 7984 வாக்குகளையும், நான்காவது இடத்தில் தேமுதிக -1115 வாக்குகளையும் பெற்றது. 

இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அதன் பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்க அவர், சி.பா. ஆதித்தனார் இருந்த காலத்தில் நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று இருந்தது. இப்போது அப்படி ஒரு கட்சி இருப்பதாக எனக்கு தெரியவில்லை." என்று வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Evks Elangovan about ntk party 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->