எங்கிருந்தாலும் நீயாகவே வந்து விடு - பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் தேவகவுடா! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் சுமார் மூவாயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த விவகாரத்தில் ஹாசன் தொகுதியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவிற்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின.

மேலும் இதில் அவரது தந்தை ரேவண்ணாவிற்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக ஹாசன் மாவட்டத்தில் தேர்தல் முடிந்ததும் பிரஜ்வல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமரும், பிரஜ்வலின் தாத்தாவுமான தேவகவுடா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், " பிரஜ்வல் ரேவண்ணா குறித்து வெளியான தகவல்களில் உண்மை இருக்குமானால் அவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த விவகாரத்தில் பலரும் என்னை விமர்சித்து வருகின்றனர். அவர்கள் உண்மை தெரியும்வரை பொறுத்திருக்க வேண்டும். மேலும் பிரஜ்வலை நான் பாதுகாக்கவில்லை. என்மீதான விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. 

ஆனால் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எச்சரிக்கை விடுக்கிறேன். என்மீது அவருக்கு மரியாதை இருந்தால் எங்கிருந்தாலும் வந்து சட்டத்தின் முன் சரணடைய வேண்டும். இதில் நானோ என் குடும்பமோ தலையிட மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex PM Warn to karnataka Prajwal Revanna


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->