தமிழகத்தில் குடும்ப அரசியல்தான்! திமுக விமர்சனம் செய்வது சரியல்ல! - கார்த்தி சிதம்பரம்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதிவிவழங்கப்பட்டத்தை குறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்ததாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்தது, முதல்வரின் நிர்வாக அதிகாரத்தில் உள்ள ஒரு தீர்மானம் எனக் கூறிய அவர், இதனை விமர்சிப்பது சரியானதல்ல என்றார். 

மந்திரிசபை மாற்றங்கள் அரசியல் அமைப்பின் இயல்பான ஜனநாயக நிகழ்வாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய அளவில் அரசியல் கட்சிகள், குடும்பங்களை மையமாகக் கொண்டு செயல்படுவது சாதாரணமான விஷயம் என்றும், கட்சியில் உள்ளவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டபின், வெளியில் உள்ளவர்கள் அதனை விமர்சிப்பது உகந்ததல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜி மீதான வழக்குகள், அவரின் அமைச்சர்பதவிக்கு தடையாகாது என்றும், தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே பதவியை பறிக்கலாம் என்றார். 

கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு, காங்கிரஸ் மற்றும் திமுக இடையே உறுதியான கூட்டணி தொடரும் என்றும், எங்களது ஒற்றுமை ஆற்றல் மிகுந்ததாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Family politics in Tamil Nadu It is not right to criticize DMK Karthi Chidambaram


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->