பல் இளித்த பகுத்தறிவு.. கோபாலபுரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு ஆரத்தி எடுத்த குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக கட்சியினருடன் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு குடும்பத்தினர் வரவேற்றனர்.

இந்த நிலையில் பகுத்தறிவு பேசும் திமுகவினர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி ஏற்பு விழா நடத்தியதை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தற்போது ஆரத்தி எடுத்து திலகமிட்ட சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

family took aarti to Minister Udayanidhi in Gopalapuram.!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->